"டிரெவி" நீரூற்றுக்குள் உலக நாடுகளின் தலைவர்களுடன் சேர்ந்து நாணயம் வீசி மகிழ்ந்த பிரதமர் மோடி

0 2844

த்தாலியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, உலக நாடுகளின் தலைவர்களுடன் சேர்ந்து டிரெவி நீரூற்றுக்குள் நாணயம் வீசி மகிழ்ந்தார்.

பாரம்பரியமிக்க டிரெவி நீரூற்றுக்குள் நாணயத்தை வீசினால் மனதில் நினைத்தது நிறைவேறும் என்ற ஐதீகம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ரோம் மாநகர் சென்ற உலக நாடுகளின் தலைவர்கள் டிரெவி  நீரூற்று மற்றும் அதனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிலைகளின் அழகை ரசித்தனர்.

பின் வரிசையாக நின்று, யூரோ நாணயத்தை தங்கள் தோளுக்குப் பின்புறம் உள்ள நீரூற்றில் வீசினர்.

ஆண்டுதோறும் இந்த நீரூற்றுக்குள் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நாணயங்கள் வீசப்படுவதாகவும், அவற்றை சேகரித்து ஏழைகளின் சேவைகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments