இட்லி வேகவில்லை என வாடிக்கையாளர் தகராறு.. குடிபோதையில் தகராறு செய்வதாக ஹோட்டல் உரிமையாளர் புகார்..!

0 10000
இட்லி வேகவில்லை என வாடிக்கையாளர் கூறிய புகார்

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இயங்கி வரும் சைவ உணவகத்தில் இட்லி வேகவில்லை எனக் கூறி வாடிக்கையாளர் ஒருவர் புகார் கூறிய நிலையில், குடிபோதையில் வந்து தகராறு செய்ததாக சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.

ஐயப்பன் காபி ஹோட்டல் என்ற கடைக்கு சாப்பிட வந்த இருவர் இட்லி ஆர்டர் செய்திருக்கின்றனர். பின்னர், இட்லி வேகவில்லை என்றும், கல்லு மாதிரி இருக்கிறது எனவும் கூறி இருவரும் ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டிருக்கின்றனர்.

ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் வாடிக்கையாளர் கையில் வைத்திருந்த இட்லியை பிடுங்கி, இலையை எடுத்துச் சென்று குப்பையில் போடவே, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றியது.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இருவரும் குடிபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டதாகவும், காவல்துறைக்கு அழைத்து சம்பவத்தை கூறியதும் கடையில் தகராறு செய்த இருவரும் ஓடிவிட்டதாகவும் சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments