முதன் முறையாக பொதுவெளியில் தோன்றிய தாலிபான் தலைவர்

0 2457

ப்கானிஸ்தானின் காந்தஹாரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய தலிபான் அமைப்பின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாடா, முதன் முறையாக பொது வெளியில் தோன்றியதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு முதல் தாலிபான் இயக்கத்தின் தலைவராக அகுந்த்சாடா உள்ள நிலையில்,  ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபிறகும் கூட பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

இதனால் அவர் உயிரிழந்துவிட்டதாக கூட வதந்திகள் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சனிக்கிழமை தாருல் உலூம் ஹக்கிமா மதரஸாவில் தாலிபான்கள் முன் அகுந்த்சாடா உரையாற்றியுள்ளார். தனது உரையில் அரசியல் தொடர்பாக அவர் பேசவில்லை என்றும் முழுவதும் மதம் சார்தே பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments