சாலையை கடக்க முயன்றபோது பயங்கரமாக மோதிக் கொண்ட லாரிகள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

0 4421
சாலையை கடக்க முயன்றபோது பயங்கரமாக மோதிக் கொண்ட லாரிகள்

தருமபுரி மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற இரண்டு லாரிகள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

காரிமங்கலத்தில் இருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று வெள்ளிச்சந்தையில் சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது பக்கவாட்டு திசையில் இருந்து வேகமாக வந்த டிப்பர் லாரி, சிமெண்ட் லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் சிமெண்ட் லாரி ஓட்டுநர் அக்பர் காயமடைந்த நிலையில், தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments