மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்த முடிவு - ரயில்வே நிர்வாகம்

0 4956
மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்த முடிவு

மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்தவும் மதுரை பெரியார் பாலத்தை விரிவுபடுத்தவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 325 ரயில் நிலையங்களில் முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகளை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ள நிலையில், முதற்கட்டமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, எர்ணாகுளம், கொல்லம் உள்பட 21 ரயில் நிலையங்கள் நவீனமயம் ஆக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மதுரை பெரியார் பேருந்து நிலைய மேம்பாலத்தை தற்போதைய ரயில்வே குடியிருப்பு பகுதிக்குள் நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்து தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments