கடைக்கு முன் சிறுநீர் கழித்ததாக கூறி நபரை கொலை செய்த தாய், மகன் கைது

0 2288
கடைக்கு முன் சிறுநீர் கழித்ததாக கூறி நபரை கொலை செய்த தாய், மகன்

சேலம் மாவட்டம் ஓமலூரில் கடைக்கு முன் சிறுநீர் கழித்ததற்காக, நபரை அடித்துக் கொலை செய்ததாக கூறி தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.

சுப்பிரமணி என்பவரும், சந்தோஷ் கதிர்வேல் என்பவரும் ஓமலூர் பேருந்து நிலையத்தில் அருகருகே வளையல் கடை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு கடையை அடைத்துவிட்டு, வீட்டுக்கு புறப்படும் போது சந்தோஷ் கதிர்வேலின் கடைக்கு முன்னேயே சுப்பிரமணி சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.

இதனை சந்தோஷும், அவரது தாய் சுகுணாவும் தட்டிக் கேட்கவே இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகியுள்ளது. அப்போது, தாயும், மகனும் சேர்ந்து சுப்பிரமணியை தாக்கி, கழுத்தை நெரித்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து காவல் நிலையத்திற்கு புகாரளிக்கச் சென்ற சுப்பிரமணி, ரத்த வாந்தி எடுத்த நிலையில், ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தோஷ் கதிர்வேல், அவரது தாய் சுகுணாவை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments