எல்லையில் சீனா படைகளைக் குவித்து வரும் நிலையில், போர்த்தளவாடங்களை எல்லைக்குக் கொண்டுசென்றது இந்தியா

0 16675

அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட நவீன ஆயுதங்கள், போர்த் தளவாடங்களைச் சீனாவுடனான எல்லை நெடுகிலும் உள்ள ராணுவ நிலைகளுக்கு இந்தியா கொண்டுசென்றுள்ளது.

கிழக்கு லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், அருணாசலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளிலும் சீனா படையினரைக் குவித்து வருகிறது. சீனப் படையின் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில் படை வலிமையை அதிகரிக்க இந்தியாவும் அமெரிக்காவிடம் வாங்கிய சினூக் ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை எல்லைப் பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளது.

இதேபோல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஒலியைவிட அதிவேகத்தில் செல்லும் ஏவுகணைகள், நவீனக் கண்காணிப்புக் கருவிகள் ஆகியவற்றையும் எல்லைப் பகுதிக்குக் கொண்டுசென்றுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments