பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொண்டாட்டம், 2 கார், 127 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

0 2824

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த அபிராமம் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மேற்கூரையின் மீது ஏறிச் சென்ற 13 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

வாகனம் ஓட்டி வந்த அரசு ஊழியரை தரக்குறைவாக பேசி, பணிசெய்யவிடாமல் தடுத்ததோடு, வாகனத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
மதுரையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, அரசு பேருந்துகளை சேதப்படுத்திய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு, மாட்டுத்தாவணி அருகே அரசு பேருந்துகளை வழிமறித்து மேலே ஏறி ஆட்டம் போட்டதோடு, முகப்பு கண்ணாடியை உடைத்து அட்டகாசம் செய்தனர். இது சம்பந்தமாக 2 கார், ஒரு ஆட்டோ, 127 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments