குரு பூஜை விழாவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரில் தொங்கியபடி சென்ற சம்பவம், ஓட்டுநர்களை கைது செய்த போலீசார்

0 19094

சிவகங்கையில் மருது பாண்டியர் குரு பூஜை விழாவுக்கு காரில் சென்ற சிலர், ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ வெளியான நிலையில், கார் ஓட்டுநர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இரண்டு கார்களில் சென்ற இளைஞர்கள், காரின் பேனட் மீது படுத்துக் கொண்டும், தொங்கிக் கொண்டும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்புவனம் அடுத்த பாப்பங்குளத்தைச் சேர்ந்த கவியரசன், மதுரை அடுத்த சோளங்குருணியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி ஆகியோரை கைது செய்து இரண்டு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments