மருத்துவமனையில் ரஜினி உடல்நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர்

0 3290

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்துக்கு, கழுத்து பகுதி ரத்தநாளத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும், ரஜினியின் உறவினர்களிடமும் கேட்டறிந்தார்.

மேலும், ரஜினிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் முதலமைச்சர் விசாரித்தார். இதனிடையே, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உடல்நலம் குறித்தும் முதலமைச்சர் நேரில் சென்று விசாரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments