கொலம்பியாவில் பார்சல் மூலம் வெளிநாடுகளுக்கு 2.2 டன் கொக்கைன் கடத்தல் - பறிமுதல் செய்த போலீசார்!

0 1974

கொலம்பியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கடத்த முயன்ற 2 டன் கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் பார்சல் போல் போதை பொருளை கட்டி அனுப்பி இருந்ததாகவும், ஸ்கேனிங் செய்த போது போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பாண்டில் மட்டும் இதுவரை 302 டன் போதை பொருள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments