கூர்மையான பொருட்களின் மீது பந்தைச் சுழலவிட்டு வியக்க வைத்த இளைஞர்

0 1734

இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூடைப் பந்துகளை கத்தி, பென்சில், ஸ்பூன் உள்ளிட்ட பொருட்களின் மீது சுழற்றி விட்டு பலரது பாராட்டையும் பெற்று வருகிறார்.

எஸ்ஸெக்ஸ் பகுதியைச் சேர்ந்த அந்தோணி லெஃப்லி என்பவர் மக்களின் கவனத்தை ஈர்த்து, பாராட்டைப் பெற வேண்டும் என யோசித்தார். அதன் விளைவாக கூடைப் பந்துகளை வாங்கி விரல்களில் சுற்றி வைத்து விளையாட்டுக் காட்டினார்.

நாளடைவில் கூர்மையான கத்தியின் முனை, பென்சிலின் முனை போன்றவற்றிலும் பந்தைச் சுழலவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.குறிப்பாக ஷேவிங் செய்து கொண்டே ரேஸரில் சுழல விடுவது, சாப்பிட்டுக் கொண்டே ஸ்பூனில் பந்தைச் சுழல விடுவது, எழுதிக் கொண்டிருக்கும் பேனாவில் சுழல விடுவது என அந்தோணியின் செயல்கள் வியக் வைக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments