செம்பரம்பாக்கம் ஏரியில் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணி தீவிரம் - முதலமைச்சர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை!

0 1812

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியில் மண்டிக் கிடக்கும் ஆகாய தாமரைகளை அகற்றும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

முதலமைச்சர் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு அருகே தேங்கியுள்ள ஆகாயத்தாமரை செடிகள் மிதவை படகு மூலம் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்றப்படுகிறது.

மேலும் திருமுடிவாக்கம் மற்றும் வழுதலம்பேடு ஆகிய பகுதிகளில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் மழைநீர் கால்வாய் அமைந்துள்ள கால்வாய்களிலும் உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments