திருநெல்வேலியில் நெல்லையப்பர்-காந்திமதி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா!

0 1262

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத்தை முன்னிட்டு அம்பாள் சிவபூஜை செய்யும் திருவிழா நடைபெற்றது.

திருவிழாவின் 9ஆம் நாளான நேற்றிரவு அம்பாள் காசுமாலை, பவள மாலை, காலில் கொலுசு, தலையில் சடை என சர்வ அலங்காரமாய் தங்க கேடயத்தில் நந்தி மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அர்ச்சகர் அம்பாள் சிவனை பூஜை செய்வது போன்ற பாணியில் தூபம் இடுதல், ஆரத்தி காண்பித்தல், பூக்களால் அர்ச்சனை செய்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

நிறைவாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments