காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டவர்களுக்கு இலவசமாக வழங்கிய 25கிலோ பொன்னி அரிசி!

0 1679

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முத்தியால்பேட்டை ஊராட்சியில் நேற்று நடைபெற்ற 7வது மெகா  சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டவர்களுக்கு இலவசமாக 25கிலோ பொன்னி அரிசி வழங்கப்பட்டது.

இந்த ஊராட்சியில் 90சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ள 10சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் குடும்பங்களுக்கு இலவசமாக 25 கிலோ பொன்னி அரிசி மூட்டை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து முகாமில் குடும்பம் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் அரிசி மூட்டையை வாங்கிச் சென்றனர்.  

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments