கொலம்பியா நாட்டில் மருத்துவமனையில் இருந்து கயிறு மூலம் தப்பிய முன்னாள் பெண் அரசியல்வாதி

0 1351

கொலம்பியா நாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பெண் அரசியல்வாதி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கிருந்து கயிறு மூலம் குதித்து தப்பிச் சென்றுள்ளார்.

அந்நாட்டின் முன்னாள் அரசியல்வாதியான ஐடா மெர்லானோ ரெபோல்டோ, தேர்தலுக்குப் பிறகு வாக்காளர்களிடம் மோசடி, ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக 15 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பொகாட்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரெபோல்டாவை தப்பிக்க வைக்க அவரது மகள் ஐடா விக்டோரியா மெர்லானோ முயற்சிகள் மேற்கொண்டார்.

பல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியிருந்த போது அங்கு கயிறு மூலம் ரெபால்டோ கீழே குதித்தார். பின்னர் தயராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments