மெக்ஸிகோவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2,300 ஆண்டுகள் பழமையான பழங்காலப் பொருட்கள் மீட்பு!

0 1149

மெக்சிகோவில் இருந்து  இத்தாலிக்கு கடத்தி வரப்பட்டு ஏலத்தில் விடப்பட்ட பழங்காலப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட 3 பழங்கால பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மெக்ஸிகோ வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு மனித உருவங்கள் பொறித்த களிமண் பானை மற்றும் இரண்டு தனித்தனி மனித முகங்கள் கொண்ட செராமிக் பொருட்கள் போன்றவை மீண்டும் மெக்சிகோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டு முதல் இத்தாலி இதுவரை 650 பழங்கால மற்றும் மதப் பொருட்களை மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பியுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments