டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ; தென் ஆப்ரிக்கா அணி வெற்றி

0 2382
டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ; தென் ஆப்ரிக்கா அணி வெற்றி

டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. ஷார்ஜாவில் நடைபெற்ற டி-20 போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 142 ரன்களை மட்டுமே எடுத்தது.

துவக்க வீரர் நிசங்கா அதிகப்பட்சமாக 72 ரன்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்கா தரப்பில் Shamsi மற்றும் Pretorius தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.எளிய இலக்கை சேஸ் செய்த தென் ஆப்ரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

இறுதியில், ஒரு பந்து மீதமுள்ள நிலையில் தென் ஆப்ரிக்கா இலக்கை எட்டியது. 46 ரன்கள் எடுத்த கேப்டன் பவுமா அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments