சாலை நடுவே நின்று வாகனங்களை மறித்து அட்டகாசம்.. அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்..

0 3377
மதுரையில் அரசுப் பேருந்தின் மீது ஏறி நின்று ஆட்டம் போட்ட இளைஞர்கள் நகரப் பேருந்து ஒன்றின் முகப்புக் கண்ணாடியை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் அரசுப் பேருந்தின் மீது ஏறி நின்று ஆட்டம் போட்ட இளைஞர்கள் நகரப் பேருந்து ஒன்றின் முகப்புக் கண்ணாடியை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

கோரிப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்திருந்த அந்த இளைஞர்கள், சாலை நடுவே நின்றபடி வாகனங்களை மறித்து கூச்சலிட்டு, வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தினர்.

சில இளைஞர்கள் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்றை மறித்து அதன் மேற்கூரையில் ஏறி நின்று ஆட்டம்போட்டு, கூச்சலிட்டனர். பேருந்தில் பயணித்தவர்கள் அச்சத்தில் உறைந்த நிலையில், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்னும் சிலர் நகரப் பேருந்து ஒன்றின் முன்பக்கக் கண்ணாடியை அடித்து, உடைத்து நொறுக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments