உயர்கல்வியில் சிறந்து விளங்குவதாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

0 1778
தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்குவதாக, தமிழ்நாடு அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்குவதாக, தமிழ்நாடு அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கிண்டி ராஜ் பவனில் தமிழகத்தின் 20 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை சந்தித்த ஆளுநர் ரவி, அரசு பல்கலைக்கழகங்களின் சாதனைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து கேட்டறிந்தார்.

தமிழகத்தில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் இயங்குவதை சுட்டிக்காட்டிப் பாராட்டிய ஆளுநர், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதற்கும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார்.

மேலும், பல்கலைக்கழகங்கள் மாணவர்களை ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் ஈடுபடுத்தி அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments