ஆட்டோ ஆட்டென்று ஆட்டியதால் டாடா சுமோ கவிழ்ந்து தொண்டர் பலி..! ஆறிருள் உய்த்த சோகம்

0 4818
பசும்பொன்னுக்கு ஆதரவாளர்களுடன் டாடா சுமோ ஒன்றில் தொங்கிக்கொண்டும் குதித்து ஆட்டம் போட்டபடியும் சென்ற போது நிலைதடுமாறி வாகனம் கவிழ்ந்ததால் தொங்கிக் கொண்டு ஆட்டம் போட்ட ஒருவர் நசுங்கி பலியான நிலையில் பலர் பலத்த ரத்த காயம் அடைந்தனர்

பசும்பொன்னுக்கு ஆதரவாளர்களுடன் டாடா சுமோ ஒன்றில் தொங்கிக்கொண்டும் குதித்து ஆட்டம் போட்டபடியும் சென்ற போது நிலைதடுமாறி வாகனம் கவிழ்ந்ததால் தொங்கிக் கொண்டு ஆட்டம் போட்ட ஒருவர் நசுங்கி பலியான நிலையில் பலர் பலத்த ரத்த காயம் அடைந்தனர்.

மருது பாண்டியர் குருபூஜை, முத்துராமலிங்கதேவர் ஜெயந்தி என்றால் சிவகங்கை , ராமநாதபுரம், மதுரை மற்றும் தேனிமாவட்ட மக்களில் குறிப்பிட்ட பிரிவினரிடம் உற்சாகம் கரைபுரண்டோடுவது வழக்கம். தாரை தப்பட்டை முழங்க குழு குழுவாக வாகனங்களில் புறப்பட்டுச்செல்லும் தொண்டர்களின் உற்சாகத்தால் அப்பகுதியே குலுங்கும்.

எந்த வாகனமாக இருந்தாலும் வெளியே தொங்கிக் கொண்டே குதித்து ஆடியபடியும், மேற்கூறையில் ஏறி ஆட்டம் போட்டப்படியும் செல்வது பலகாலமாக வாடிக்கையான நிகழ்வாக மாறிபோய்விட்டது.

போலீசாரும் அவர்களது உற்சாகத்துக்கு தடை போடாமல் , ஒரு நாள் தானே என்று கண்டும் காணாமல் நடந்து கொள்வது உண்டு. அந்தவகையில் இந்த முறை உற்சாக மிகுதியால் அரசு வாகனம் ஒன்றின் மீது ஏறிய ஒரு குழுவினர் ஆட்டம் போட்டனர்.

மற்றொரு குழுவினர் காவல் அதிகாரி ஒருவரது வாகனத்தில் மேலே ஏறியும், இரு பக்கமும் தொங்கியபடியே இழுத்து ஆடிப்படி போலீசாரையே மிரளவைத்தனர்.

சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை வழக்கம் போல கண்டு கொள்ளவில்லை . இருந்தாலும் இப்படி ஆபத்தை உண்டாக்கும் விதத்தில் பயணிப்பது அவர்களின் உயிருக்கே விபரீதமாய் முடியும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வந்த நிலையில், எது நடந்து விடக்கூடாது என்று கூறினார்களோ அந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் சனிக்கிழமை அரங்கேறியது.

மதுரை மதிச்சியம் பகுதியில் இருந்து பசும்பொன்னுக்கு தொண்டர்படையினருடன் புறப்பட்ட ஒரு குழுவினர் டாடா சுமோ வாகனத்தில் இதே போல இரு புறமும் தொங்கிக் கொண்டும், வாகனத்தை பிடித்து இழுத்து குதித்த படியும் உற்சாகமாக சென்றுள்ளனர். வாகனம் கமுதி அடுத்த சடையனேந்தல் விலக்கு அருகே வந்த போது தொண்டர்களின் கட்டுக்கடங்காத தொந்தரவால் ஆட்டம் கண்ட டாடாசுமோ ஒரு கட்டத்தில் கவிழ்ந்து மல்லாந்தது , இதில் வசந்தகுமார் என்ற 29 வயது இளைஞர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் 4 இளைஞர்களுக்கு கடுமையான ரத்த காயம் ஏற்பட்டது அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களின் உற்சாக துள்ளலுக்கு தவேரா வாகனம் தாக்குப்பிடித்த நிலையில் , டாடா சுமோ தள்ளாடி கவிழ்ந்து ஒரு உயிரை காவௌ வாங்கியுள்ளதாக சுட்டிக்காட்டும் காவல்துறையினர், வாகனத்தை எப்படி பயன்படுத்த கூடாது என்பதற்கு இந்த கோர விபத்து சாட்சியாகி இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments