உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க வேண்டாம் - தமிழக அரசு

0 1953
உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள், சரவெடிகள் மற்றும் "பேரியம்" ரசாயணத்தால் தயாரிக்கப்படும் பட்டாசுகளைத் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், அவற்றை பொதுமக்கள் வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடிகளை மக்கள் வெடிக்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments