"தீபாவளிக்கு வெளியூர் செல்வோர் தகவல் தெரிவித்தால் அவர்களின் வீடு கண்காணிக்கப்படும்” - சென்னை பெருநகர காவல் ஆணையர்

0 4031
"தீபாவளிக்கு வெளியூர் செல்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கோ எண் 100லோ தகவல் தெரிவித்தால் இரவில் அவர்களின் வீடு கண்காணிக்கப்படும் " என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

"தீபாவளிக்கு வெளியூர் செல்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கோ எண் 100லோ தகவல் தெரிவித்தால் இரவில் அவர்களின் வீடு கண்காணிக்கப்படும் " என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பத்தை பார்வையிட்ட அவர், கொரோனா காலத்தில் பணியின்போது உயிரிழந்த 33 காவலர்கள் மற்றும் காவல்துறை சார்ந்த பணியாளர்களின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அடுத்த மாதம் செல்போன் செயலி மூலம் வெளியூர் செல்வோரின் வீடுகளை பாதுகாக்கும் நடைமுறை அமலுக்கு வரும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments