உரிமம் இன்றி நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்தவர் கைது

0 1465
உரிமம் இன்றி நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்தவர் கைது

கடலூரில் உரிமம் இன்றி நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பட்டாசு கடைகள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு வெடி தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் 2018ஆம் ஆண்டே முடிவடைந்த நிலையில், அதன் உரிமையாளர் விதிகளை மீறி வீட்டில் வைத்து நாட்டு வெடி தயாரித்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நாட்டு வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments