முதன்முறையாக 121 ரூபாயை கடந்தது பெட்ரோல் விலை..

0 3346
முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 121 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 121 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அம்மாநிலத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 121 ரூபாய் 13 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 110 ரூபாய் 29 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

அனுப்பூர் மாவட்டத்துக்கு சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜபல்பூர் எண்ணெய் கிடங்கில் இருந்து பெட்ரோல் கொண்டு வரப்படுவதால், நாட்டின் மற்ற பகுதிகளைவிட இங்கு பெட்ரோல் விலை அதிகமாக உள்ளதாக அப்பகுதி பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments