முதல் 15 நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள் - பள்ளிக்கல்வித்துறை

0 2397
முதல் 15 நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள்

வரும் 1ஆம் தேதி 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குப் பின் அடுத்த 40 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கிட வேண்டும் என்றும், கற்றல் அடைவுத்திறனை எட்டும் வரை புத்தாக்கப்பயிற்சி தொடரப்பட வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments