தீபாவளிக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத் துறை அமைச்சர்

0 1909
தீபாவளியை முன்னிட்டுப் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிட 16 ஆயிரத்து 540 சிறப்புப் பேருந்துகளும், திரும்பி வர 17 ஆயிரத்து 719 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 1, 2, 3 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மொத்தம் 9806 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மூன்று நாட்களும் 6734 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தீபாவளி முடிந்த பின்னர் நவம்பர் 5 முதல் 8 வரை பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும், பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் மொத்தம் 17 ஆயிரத்து 719 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு தவிர மாதவரம், கலைஞர் நகர், பூவிருந்தவல்லி, தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலையம் ஆகிய நான்கு இடங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments