தூத்துக்குடியில் 3 நாட்களாக பெய்து வரும் கனமழை ; இரயில் நிலையம், குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம்

0 1404
இரயில் நிலையம், குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம்

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீதிபதிகள் குடியிருப்பு, அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

தூத்துக்குடி மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் இரயில் நிலையம், குடியிருப்புப் பகுதிகள், அரசு மருத்துவமனை வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு என தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து தேங்கி நிற்கிறது.

குறிப்பாக நீதிபதிகள் குடியிருப்பில் இருப்பவர்கள் வெளியில் வர முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments