கோவா சென்றுள்ள ராகுல் காந்தி பைக் டாக்சியில் பயணம் செய்த வைரல் காட்சிகள்..

0 1615
கோவா சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அங்கு பைக் டாக்சியில் பயணம் செய்த காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கோவா சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அங்கு பைக் டாக்சியில் பயணம் செய்த காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அம்மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், அண்மையில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை அடுத்து, காங்கிரஸ் தரப்பில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கோவா சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று பனாஜியில் உள்ள ஆசாத் மைதானத்திற்கு செல்ல ராகுல் காந்தி பைக் டாக்சியில் பயணம் மேற்கொண்டார். இந்த காட்சிகள் கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rahul Gandhi takes a ride on a 'pilot' - a traditional motor cycle taxi in Goa.#RahulGandhiWithGoa pic.twitter.com/MDlHuOzGjL

— Goa Congress (@INCGoa) October 30, 2021 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments