முல்லை பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் ஒரு தோற்றத்தை ஏற்பத்துவது உண்மைக்கு புறம்பானது - அமைச்சர் துரைமுருகன்

0 1493
முல்லை பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்துவது உண்மைக்கு புறம்பானது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்துவது உண்மைக்கு புறம்பானது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்ற ஆணையின்படி அதிகபட்சமாக 142 அடி வரை தேக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த 28ஆம் தேதி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்ததால் 2 மதகுகளை திறக்க மதுரை மண்டல நீர்வளத்துறை முடிவெடுத்து, அன்றே திறக்கப்பட்டதாக துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

கேரள அதிகாரிகள் தான் மதகுகளை திறந்தார்கள் என்று கூறுவது தவறானது என தெரிவித்த அவர், தமிழகத்தின் கட்டுப்பாட்டில் அணை முழுமையாக உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் தேவையில்லை என்றார்.

மேலும், நவம்பர் 30 முதல் அனுமதிக்கப்பட்ட 142 அடி அளவிற்கு நீர்வரத்தை பொறுத்து நீர் தேக்கி வைக்கப்படும் என துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments