உணவுப்பொருட்கள் ரசீதில் உணவுக் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி எண் கட்டாயம் இருக்க வேண்டும் ; உணவுத்துறை அலுவலர்கள்

0 1421
உணவுப்பொருட்கள் ரசீதில் உணவுக் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி எண் கட்டாயம் இருக்க வேண்டும்

இனிவரும் காலங்களில் உணவுப் பொருட்கள் வாங்கியதற்கான ரசீதில் உணவுக் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி எண் கட்டாயம் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை சார்பாக இனிப்பு, காரம் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பின்னர் அருகிலிருந்த இனிப்பு, கார உணவுகள் தயாரிக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவுத்துறை அலுவலர்கள், சுகாதாரமாக உணவுப்பொருட்களை தயாரிக்குமாறு அறுவுறுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments