நகை வாங்குவதுபோல் சென்று ஒன்றரை சவரன் சங்கிலி திருட்டு

0 1533
நகை வாங்குவதுபோல் சென்று ஒன்றரை சவரன் சங்கிலி திருட்டு

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் 3 பெண்கள் நகைகள் வாங்குவது போல் வந்து, நகைக்கடை ஊழியரின் கவனத்தை திசை திருப்பி, ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தர்மலிங்கம் என்பவருக்குச் சொந்தமான குமரன் ஜுவல்லர்ஸ் என்ற அந்தக் கடைக்கு கடந்த 21ஆம் தேதி அந்தப் பெண்கள் வந்துள்ளனர். பெண் ஊழியர் ஒருவர் பெட்டியில் வைக்கப்பட்ட நகைகள் ஒவ்வொன்றாக எடுத்துக் காண்பிக்கிறார்.

“அந்த நகையை காண்பியுங்கள், இந்த நகையைக் காண்பியுங்கள்” என பெண் ஊழியரை திருடிகள் 3 பேரும் அலைக்கழிக்கின்றனர். அதில் ஒருவர், பெண் ஊழியர் கவனிக்காத ஒரு தருணத்தில், ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியை எடுத்து கையில் மறைத்து வைத்து, சிறிது நேரம் கழித்து மற்றொரு பெண்ணின் கைக்கு அதனை மாற்றுகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments