மசாஜ் சென்டருக்குள் பட்டாக் கத்தியுடன் நுழைந்து கொள்ளையடித்த விவகாரம், மேலும் இருவர் கைது

0 1975

சென்னை வேளச்சேரியில் மசாஜ் செண்டருக்குள் புகுந்து பட்டாக் கத்தியால் பெண்ணை தாக்கிவிட்டு நகை, பணத்தை பறித்துச் சென்ற மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 26ஆம் தேதி கிரியேட்டர் சலூன் அண்ட் ஸ்பாவுக்குள் திடீரென புகுந்த மர்ம கும்பல், ஸ்பா ஊழியரை தாக்கி விட்டு அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் நகை, கல்லாவில் இருந்த 30ஆயிரம் ரூபாய், 7 செல்போன்களையும் பறித்துக் கொண்டு தப்பியோடியது.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், புகாரின் பேரில் ஏற்கனவே இருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய பிரபாகரன் மற்றும் திமுகவை சேர்ந்த நாகராஜன் ஆகியோரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments