தூத்துக்குடியில் இரவு முழுவதும் பெய்த கனமழை, வீடுகளுக்குள் தண்னீர் புகுந்தததால் மக்கள் அவதி

0 2380

தூத்துக்குடியில் இரவு முழுவது பெய்த கனமழையின் காரணமாக கீழூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் குளம் போல் மழைநீர் தேங்கியதால், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மேலூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால்,  பழைய மாநகராட்சி, அந்தோனியார் கோயில் தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

இதேபோல் சில குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கீழூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் குளம் போல் மழைநீர் தேங்கியதால், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மேலூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் இறங்கிவிடப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments