நவ.1 முதல் பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1891

நவம்பர் 1-ஆம் தேதி முதல், மீண்டும் பள்ளிக்கு பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா காலம் முடிவுக்கு வந்து மெல்ல மெல்ல ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்படும் நிலையில், பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா இருள் நீங்கி, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை மாணவர்கள் தொடங்க இருப்பதாகவும், பள்ளிகளை நோக்கித் துள்ளிவரும் பிள்ளைகளை வரவேற்பதாகவும் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கல்விச் சாலைகளின் கதவுகள் நோக்கி வரும் மாணவர்களை வரவேற்க எம்பி, எம்.எல்.ஏக்கள், ஆசிரியர்களை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். பள்ளிகளில் முதலிரு வாரங்களுக்கு கதை, பாடல், விளையாட்டு உத்திகளை வகுப்பறைகளில் வழங்க ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments