நாட்டுவெடிகுண்டு வீசி இரண்டு ரவுடிகள் கொல்லப்பட்ட விவகாரம், வீடு வீடாக போலீசார் சோதனை

0 2330

புதுச்சேரி வாணரப்பேட்டையில் வீடு வீடாக வெடிகுண்டு நிபுணர்கள் உடன் சென்று சோதனை நடத்திய போலீசார் ஆயுதங்களுடன் இருந்த 10க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 23ஆம் தேதி வாணரப்பேட்டை பகுதியில் இரண்டு ரவுடிகள் நாட்டுவெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட நிலையில், அவ்வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பழித்தீர்க்கும் வகையில் மேலும் குற்றச் சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, அப்பகுதியில் அதிகாலை முதல் வெடிகுண்டு நிபுணர்கள் உடன் போலீசார் சோதனை நடத்தினர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments