பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி விழா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

0 2068

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மரியாதை செலுத்தினார். 

முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் அங்குள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். முன்னதாக பசும்பொன் செல்லும் வழியில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவரின் முழு வெண்கல திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments