வீட்டின் மேல்தளத்தை விமானம், கப்பல் வடிவில் கட்டியுள்ள பஞ்சாபியர்

0 2276

பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் வீடுகளின் மேல்தளத்தை விமானம், கப்பல் ஆகியவற்றைப் போல் வடிவமைத்துக் கட்டியுள்ளனர்.

ஜலந்தர் மாவட்டம் உப்பல் பூபா என்னும் ஊரைச் சேர்ந்த மக்களில் பலர் பிரிட்டன், கனடா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சொந்த ஊரில் கட்டியுள்ள வீடுகளின் மேல் தளத்தை விமானம், கப்பல் ஆகிய வடிவங்களில் கட்டியுள்ளனர்.

வீட்டின் உச்சியில் உள்ள தண்ணீர்த் தொட்டியைத் தாமரை வடிவிலும் கட்டியுள்ளனர். அத்துடன் சிங்கம், குதிரை ஆகிய விலங்குகளின் சிலைகளையும் வைத்துள்ளனர். இந்தக் கட்டுமானக் கலையின் அழகைக் காண வெளியூர்க்காரர்கள் பலர் அங்குச் சென்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments