நீதிபதி உத்தம் ஆனந்த் வாகனம் மோதி கொல்லப்பட்ட வழக்கு... சிபிஐ குற்றப்பத்திரிகை நாவலைப் போல உள்ளது அம்மாநில உயர்நீதிமன்றம் விமர்சனம்

0 1522

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி உத்தம் ஆனந்த் வாடகை வாகனம் மோதி கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நாவலைப் போல இருப்பதாக அம்மாநில உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்கள் மீது ஐபிசி 302 பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது வெளியான புதிய தகவல்களையும் சிபிஐ கவனத்தில் கொள்ளவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இந்த வழக்கின் விசாரணை வரும் நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments