தெலுங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்

0 1425

தெலுங்கானா மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உள்பட 11 மாநிலங்களில் 3 மக்களவைத் தொகுதிகள் 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அந்தந்த மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை இந்த இடைத்தேர்தல்கள் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் 2 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் ஒரு தொகுதியில் இன்று மக்களவை இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

அஸ்ஸாமில் 5 வங்கத்தில் 4 மத்தியப் பிரதேசம் மற்றும் மேகாலயாவில் தலா 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. பீகார், கர்நாடகா, ராஜஸ்தானில் தலா இரண்டு தொகுதிகளுக்கும் மகாராஷ்ட்ரா, தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, மீசோராம் ,நாகாலாந்து மாநிலங்களில் தலா ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments