இறப்பதற்கு முன் தனது சகோதரரின் படம் வெளியீட்டை முன்னிட்டு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த புனித் ராஜ்குமார்!

0 3621

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், இறப்பதற்கு முன் தனது சகோதரரின் படம் வெளியீட்டை முன்னிட்டு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

புனித் ராஜ்குமாரின் அண்ணணும், நடிகருமான ஷிவ்ராஜ்குமார் நடித்துள்ள பஜ்ரங்கி 2 என்ற படம் இன்று வெளியாகி உள்ளது. அதற்காக தனது சகோதரருக்கும், அந்த பட குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து புனித் ராஜ்குமார் டீவிட் செய்துள்ளார்.

அடுத்த சில மணி நேரங்களில் ஜிம்மில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் மட்டுமின்றி பாடகர், தயாரிப்பாளர் என்ற பன்முறை திறமை கொண்ட புனித்தின் மரணம் திரையுலகினரை கலங்க வைத்துள்ளது. இதனிடையே புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments