தவேராவுக்கு வாயிருந்தா ஒப்பாரியே வச்சிருக்கும்..! எத்தன பேரு இப்படி தொங்குறாய்ங்க!

0 3669

சிவகங்கையில் நடந்த மருது பாண்டியர் குரு பூஜைக்கு காரில் சென்றவர்கள் உற்சாக மிகுதியால் விபத்து ஏற்படுத்தும் விதமாக காரில் தொங்கிக் கொண்டு சென்ற விபரீத வீடியோ வெளியான நிலையில் காவல்துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகங்கையில் நடந்த மருது பாண்டியர் குரு பூஜை விழாவுக்கு இரு கார்களில் சென்ற சிலர் தங்கள் பராக்கிரமத்தை காட்டும் விதமாக காரின் பேனட் மீது படுத்துக் கொண்டும், காரின் மூன்று பக்கமும் , தங்கள் பவரை காட்டும் விதமாக பலமாக இழுத்தபடியும், தொங்கிக் கொண்டும் சென்றனர்

விபத்தை ஏற்படுத்தும் விதமாக சென்ற அந்த கருப்பு வர்ண காருக்கு பின்னால் சென்ற மற்றொரு காரிலும் சிலர் அதே பாணியில் காரில் தொங்கிக் கொண்டு சென்றனர்

அதிர்ஷடவசமாக அப்படி தாறுமாறாக குதித்து , இழுத்து, தொங்கி பார்த்தும் அந்த கார்களுக்கும், அதில் தொங்கிய படி சென்றவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

சென்னை போன்ற பெரு நகர பகுதிகளில் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றாலே நிறுத்தி அபராதம் வசூலிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற விதிமீறலுடன் இயக்கப்படும் கார்களை சாலையில் எப்படி அனுமதிக்கின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments