கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பண்ணை சாரா கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் - கொ.ம.தே.க. பொது செயலாளர் ஈஸ்வரன்!

0 2397

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பண்ணை சாரா கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகள் பெற்ற பயிர் கடனை ஒவ்வொரு முறை அரசு தள்ளுபடி செய்யும்போது இந்த பண்ணை சாரா கடன்களை தள்ளுபடி செய்யப் படுவதில்லை, ஆனால் இவர்கள் பெற்ற கடன்கள் அனைத்தும் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர், இந்த பிரச்சனையானது தமிழகம் முழுவதும் உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் அரசிடம் எடுத்துச் செல்ல உள்ளோம் அதன் அடிப்படையில் அரசு இந்த கடன்களைத் தள்ளுபடி செய்யும் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments