நரிக்குறவர் இன மக்களோடு சேர்ந்து உணவருந்திய அமைச்சர் சேகர்பாபு!

0 4043

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு, நரிக்குறவர் இன மக்களோடு சேர்ந்து உணவருந்தினார்.

கடந்த வாரம் இந்தக் கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற தன்னை தரக்குறைவாகப் பேசி கோவில் ஊழியர்கள் விரட்டியதாக அஸ்வினி என்ற நரிக்குறவர் இனப் பெண் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து அஸ்வினியை தேடி அழைத்துவரக் கூறி, அவர்களது குடும்பத்தாரோடு இன்று கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு உணவருந்தினார்.தொடர்ந்து நரிக்குறவர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments