கொடைக்கானலில் கட்டுப்பாட்டை இழந்த கார்... சாலையோரமாக நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து!

0 2162

கொடைக்கானலில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமாக நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆமோஸ் என்பவர் தனது குடும்பத்தினருடன் கேரளாவில் இருந்து காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.

அண்ணாசாலை பகுதியில் காரை நிறுத்தி வைத்துவிட்டு விடுதியில் அறையை பார்ப்பதற்காக குடும்பத்தினர் அனைவரும் இறங்கி சென்று விட்ட நிலையில், காரில் ஆமோஸின் 8 வயது மகன் மட்டும் உறங்கிக் கொண்டிருந்தான்.

செங்குத்தான அந்த சாலையில் மேடு பகுதியில் நின்றிருந்த கார் திடீரென தாழ்வான பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. இதனை பார்த்த ஆமோஸின் உறவினர் காரில் ஏறி காரை நிறுத்த முற்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் அங்கு நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியதோடு, சாலையோர தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் வாகனத்தை நிறுத்த முற்பட்டவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், 8 வயது சிறுவன் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments