ஜூஸ் பாக்கெட்டை கொடு...கண்ணாடியை எடு... ராஜதந்திரம் வெற்றி பெற்றதால் சுமூகமாக முடிந்த டீல்!

0 2280

திருடிய கண்ணாடியை திருப்பி கொடுக்க எக்சேஞ்ச் ஆஃபராக குரங்கு ஒன்று ஜூஸ் வாங்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீட்டுக்குள் புகுந்த குரங்கு ஒன்று கண்ணாடியை திருடிக் கொண்டு ஒய்யாரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது. வீட்டு உரிமையாளர் கேட்ட போதும் கண்ணாடியை திருப்பிக் கொடுக்காமல் குரங்கு விடாப்பிடியாக இருந்துள்ளது.

இதனையடுத்து, தனது வீட்டில் இருந்த ஜூஸை எடுத்து வந்து குரங்கிடம் காட்டவே, அதனை உடனடியாக வெடுக்கென குரங்கு பறிக்க முயன்றது. அப்போது, அந்த நபர் ஜூஸை கொடுக்காமல் முதலில் கண்ணாடியை கொடுக்குமாறு சைகையில் காட்டவே, அதற்கு மறுத்துவிட்ட குரங்கு மீண்டும் கையில் இருந்த ஜூஸை பறித்துக் கொண்டது. பின்னர், கண்ணாடியை மேலிலிருந்து கீழே தள்ளிவிட்டது.

காவல்துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments