தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதில் உறுதி - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

0 1639

தேசிய கல்விகொள்கை திட்டம் தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பிய பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தமிழகத்தில் அத்திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இனிமேல் எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் ஆலோசிக்காமல் பதில் அளிக்ககூடாது என கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார். நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி என்றும், மாணவர்களை பள்ளிகளுக்கு கட்டாயமாக வர வேண்டும் தனியார் பள்ளிகள் வற்புறுத்தக்கூடாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments