மேற்கு வங்கத்தில் பண்டிகை காலங்களில் பட்டாசுகளை விற்க, வெடிக்க முழுமையாக தடை

0 2360

மேற்கு வங்கத்தில் தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிப்பதற்கும் முழுமையாக தடை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களில் பசுமை பட்டாசுகளை குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்க அம்மாநில அரசு அனுமதி அளித்திருந்தது. பட்டாசுகள் வெடிக்க முழுமையாக தடைவிதிக்கக்கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதன் விசாரணையின்போது, கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்ட நீதிமன்றம், சாதாரண பட்டாசிற்கும், பசுமை பட்டாசிற்கும் உள்ள வேறுபாடை கண்டறிய காவல்துறைக்கு போதிய வசதிகள் இல்லை என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments