பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் சசிகலா மரியாதை

0 1727

முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய, அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் பசும்பொன் கிராமத்திற்கு ஆதரவாளர்களுடன் வந்த சசிகலா, நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் முத்துராமலிங்கத்தேவர் வாழ்ந்த வீட்டிற்குள் சென்று அவரது வரலாற்று புகைப்படத்தை பார்வையிட்ட அவர் அங்குள்ள தேவர் சிலை முன்பு அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments