2ஆம் வகுப்பு மாணவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்ட தலைமையாசிரியர் கைது

0 3342

உத்தரபிரதேசத்தில் குறும்பு செய்த 2-ஆம் வகுப்பு மாணவனை கண்டிக்க, அவனை தலைகீழாக பிடித்து பள்ளியின் மேல் தளத்திலிருந்து கீழே தொங்கவிட்டு அதட்டிய  தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிர்ஸாபூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் சிறுவன் சக மாணவனை கடித்து வைத்ததாக கூறப்படுகிறது. கடி வாங்கிய மாணவனிடம் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் மேல் தளத்திலிருந்து கீழே போட்டுவிடுவதாக தலைமையாசிரியர் Manoj Vishwakarma மிரட்டியதாக கூறப்படுகிறது.

மாணவனை தலைமையாசிரியர் தலைகீழாக பிடித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் அவர் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments